வேதனையாக இருந்த
என் இதயத்திற்கு,
மருந்தாக அன்பு கொண்டு நீ வந்தாய்.
பாலைவனமாய் இருந்த
என் இதயத்தில்,
காதல் பூவை அழகாக பூக்க வைத்தாய்.
என் காதலை எவ்வாறு சொல்வதென,
எனக்கு தெரியவில்லை
உன்னிடத்தில்.
நான் உன்னுடன் போடும் சண்டையில்,
ஒளிந்து மறைந்து இருக்கும்
நான் சொல்ல முடியாதிருக்கும்
உன் மேல் உள்ள என் காதல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக