வியாழன், 6 ஜனவரி, 2011


இரவுகளின் நீளத்தோடு
இதயத்தின் வழியும்
இப்போது
நான் உணருகிறேன்,

கண்களில்
சிறகடித்த கனாக்கள்
கனவுகளாகவே போக
என் இதயம்
இரத்தக்கண்ணீர் வடிக்கிறது,

உறங்க மறுத்த
உள்ளம் - ஓராயிரம்
உள்ளக் குமுறலை
உதிர்த்து கொண்டிருக்க
நிம்மதி
தொலைதூரம் தொலைந்துபோனது,

விழிகளை
திறந்தாலும் முடினாலும்
கடந்துசென்ற நினைவுகள்
என்னை
காயப்படுத்தி செல்கின்றன,

பாசம்வைத்த இதயங்களுக்கு
பிரிவுகளும் கண்ணீரும்தான்
காலத்தின் சன்மானமா?.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக