ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தொலைந்து போன
என் இதயத்தினுள்
தொலையாத நம்காதலால்
தினம்
தொலைத்து கொண்டிருக்கிறேன்
என் இரவுகளை,

அதில் தேடிக்கொண்டிருக்கிறேன்
அதன் கனவுகளை,

நாம் பிரிந்தபிறகும்
பிரியாத என்காதலால்
பிரிக்க முடியாத
நினைவுகளுக்குள் சிக்கி
தினம் தினம்
பிரியாவிடை கொடுத்து
மீள்கிறது என்உயிர்,

இமை மூடாமலேயே
இரவுகள் என்னை
விரட்டுகிறது விடியலுக்கு,

உணர்ச்சியற்ற விழிகளில்
கண்ணீர்த்துளிகள் கூட
எதிர்பார்ப்புடன்
ஒரு துளியையேனும்
உன் கரம்
தாங்காத என்று,
ஓடி ஒழிக்கிறேன்

அங்கும் இங்கும்,
என்ன செய்வது
உயிருக்குள் ஒலிக்கும்
கேள்விகளிடம் இருந்து
தப்பிக்க வழிதெரியவில்லை,

இருந்தும்
சுகமான சுமைகளாக
சுமக்கிறது
என் இதயம்
உன்னை அல்ல
உன் நினைவுகளை...,




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக