சனி, 9 அக்டோபர், 2010


சினம் கொண்டு திட்டினாலும் - அன்பாய்
தீண்டும் உன் பார்வை

ஆறுதல் தேடியலையும் போது அரவணைத்து
இன்முகம் காட்டும் உன் மனது.

காரணம் ஏதுமின்றி களிப்புற வைக்கும்  
உன் ஒற்றைப் புன்னகை

நித்தம் நித்தம் கேசம் கலைத்து
விளையாடிய உன் விரல்கள்

யாவும் இன்றில்லை எனும்போது ஏனோ 
வலித்துக் கலங்குகிறது  காதல்

மெலிதாய் சிரிக்கும் மழலைகள் முகத்தில்
தெரிவது எல்லாம் நீதான்

விடுத்த உன்சுவாசம் இன்னும் என்னை
சுற்றிக் கொண்டிருக்கிறது 

வீசும் காற்றாய் காதல் மணத்தை
பரப்பிக் கொண்டிருக்கிறாய் 

ஆதலால்தான் உன் நினைவாக நான்
காற்றை நேசிக்கிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக