வெள்ளி, 18 ஜூன், 2010

காதல்
பாடல்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல்
நினைவில் வந்தாய்

காதல்
வசனங்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல்
நினைக்க வைத்தாய்

காதல்
ஓவியங்களைப் பார்க்கும் போது
காரணமில்லாமல்
கனவாய் வந்தாய்

அப்போது
புரியவில்லை

காதலிக்க காரணம் தேவையில்லை என்று

இப்போது புரிகிறது
காரணத்தோடு வந்தால்

அது காதல் இல்லை என்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக