ஞாயிறு, 28 மார்ச், 2010

அப்பா

சுமந்தே பழக்கப்பட்டவன்
சுகமனாலும்,
சோகமானாலும்..,


என்
சொற்களின் கரைப்பட்டே
கருப்பானவன் நீ!


நீ
உயர்வாகவும் இல்லை,
தாழ்வாகவும் இல்லை.


நான்
என்னை மாற்றிகொள்ளாமல்
உன்னை மட்டுமே
குறை சொல்கிற
குருடனாய் இருந்திருக்கிறேன்


எப்போதாவது சந்திப்பேன்
நீ பட்டகாயங்களையும்,
சுமந்த சுமைகளையும்
அப்போது என்னுள்ளும்
மனிதாபிமானம் உயிர்தெழும்


உன் காலத்தில்
இழந்த இழப்புக்கள்
என்னை அதிகமாகவே பாதித்துவிட்டன


உனக்கு
என்னைவிட இழப்புக்கள் அதிகம்
என்பதை
அறியாது வளர்த்திருக்கிறேன்


உன்
கடைசி காலத்திலாவது
உன் சுமைகளை நான் ஏந்தி
உன் பாதங்களை சுமக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக