அழகு மட்டும் அழகல்ல பெண்ணே!
நான்
தேர்வெழுத
நீ காத்திருந்த நிமிடங்கள் அழகு!
தெரியாமல் செய்த
தவறுக்கு தண்டனையாய்
என்னை உறவுகளே வெறுத்த பொழுது
உறவாய் வந்த
உன் நட்பு அழகு!
முதன்முதலாய்
தோற்று அழுத போது
உன்
தோலில் சாய்த்து
ஆறுதல் சொன்ன அப்பழுகற்ற மனசு அழகு!
என்
கனவுகளுக்காக
உன் இலட்சியங்களை விட்டு
என்னோடு வந்த தருணங்கள் அழகு!
சுகமில்லாமல்
நான் கிடக்க
கோவிலுக்கே போகாத நீ
எனக்காக பிரார்த்தித்த
அந்த காலங்கள் அழகு!
வாழ்வே முடிந்ததாய்
உடைந்து விழுந்தபோது
ஊரே கைகட்டி நிற்க
உன்
கண்கள் கலங்க
ஓடோடிவந்து
வாழ்வு தந்த உன் தியாகம் அழகு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக