திங்கள், 27 டிசம்பர், 2010


தூங்கும் போது
மட்டுமல்ல

இமைக்கும் போதும்
வந்து போகும்
புயல்வேக கனவு

நீ!.


செவ்வாய், 21 டிசம்பர், 2010


நீ 
என்னருகில் வருகையில் 
என்னை சுற்றியுள்ள 

அனைத்து உயிர்களும் 
உயிரற்று போகிறது,

என்னையும் சேர்த்து…  

பெண்ணே 
உன் உதடுகள் பேசும் 
அழகை விட 

இமை திறந்து பேசும் விழிகளே 
எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது.


வெள்ளி, 17 டிசம்பர், 2010


கரையும் பனித்துளிபோல,
மறையும் மழைத்துளிபோல
தொலைத்துவிட
முடியவில்லை,

உன்னோடு 
இணைந்த
என் 
உறவையும்,
நினைவுகளையும்.



நீயில்லையென்றால்.......

காற்றுச் சுடும்
விழிகலோடு முரண் பட்டு
தூக்கம் வெளிநடப்புச் செய்யும்

உன் கடித வரிகளை
மேய்ந்து மேய்ந்தே
ஆயுளில் பாதி தேய்ந்து போகும்

நீயில்லையென்றால்
என் கவிதைகளெல்லாம்
அப்போ
இறந்தே பிறக்கும்

பசியை துக்கமும்
சந்தோஷங்களை தனிமையும்
துரத்திக் கொண்டேயிருக்கும்

உன் சிரிப்புக்களை
கனவுகளாய் சேமித்து வைத்த
இதயம்
அதை கண்ணீர் பூக்களாய்
செலவு செய்யும்

சந்தோஷம் என்பது – அப்போ
என் கடந்து போன
பக்கங்களில் மட்டுமே
எழுதப்பட்டிருக்கும்

வாழ்க்கை
உன் நினைவுகளாய் இருக்கும்
நெஞ்சு,
நினைவுகளோடு மட்டுமே
குடும்பம் நடத்திப் பார்க்கும்

நிலா கூட
ஒளியை
என்னை தவிர்த்து
பொழிவதாகவே படும் எனக்கு

ஜீவிதம் தூரமாகும்
இறப்பு மட்டும்
என்னை
சில இமைத்துடிப்பின் இடைவெளிகளில்
காத்துக்கிடக்கும்

நீயில்லையென்றால்
அறிவு
இரண்டும் இரண்டும் ஆறு என்று
தப்புத் தப்பாய் கணக்குப்போடும்

வானம் கீழிறங்கும்
ஆணலை பெண்ணலையை
விரட்டிப்பிடிக்கும்
ஒளியிழந்த சூரியன்
விறகடுப்பில் குளிர்காயும்

இன்னும்
எதுவெதுவோ நடந்து போகும்……
நீயில்லையென்றால்.



புதன், 15 டிசம்பர், 2010


காதல் 
என்ற வார்த்தையை
கேட்டு கேட்டு அதன்மேல்
என்னவோ தெரியவில்லை
ஒரு வகையறியா பாசம்!



காதலியே இல்லாமல்
காதல் கவிதையா.......?

கற்பனை கூட கடுப்பாகி
காரியுமிழ்ந்துவிடும்....



கவிதைக்காக இல்லாவிட்டாலும்
காலத்தின் ஓட்டத்தில்
என்னை கனிவோடு
காதலிக்க காதலியை
தேடிகொண்டிருக்கிறேன்..



பார்கின்ற 
பெண்ணையெல்லாம்
ஒப்பிட்டு பார்க்க்கிறேன்

கண்ணுக்குள் 
உள்ள காதலியோடு
ஒவ்வொரு ஒப்பிட்டுக்கு பின்னும்
உள்ளுக்குள்ளே சொல்லி கொள்கிறேன்...

அவளிடம்....

நீ அவள் இல்லையென்று.



செவ்வாய், 7 டிசம்பர், 2010

கடல் நுரையில் 
பிறந்தவளாம் காதல் கடவுள் வீனஸ்!

நீயோ 
கடல் நுரையாகவே பிறந்திருக்கிறாய்!

உன்னோடு 

நடக்கும்போது மட்டும் -
கால்கள் வலிப்பதே இல்லை.

கண்கள் 
நேர்கோட்டில் செல்கின்றன.

உதடுகள் 
ஊமையாகின்றன.

காதல் 
எனக்கு 
கற்றுத் தந்தது எல்லாம் -

காதலியே! 
நான் 
உன்னிடமிருந்து கற்றவைதான்.

வார்த்தைகளுக்கு 

திடீர் பஞ்சம்.
உன்னை 

வர்ணிக்கத் துவங்குகிறேன்.

வார்த்தைகள்
மீண்டும் வட்டமிடுகின்றன.
புதிய தமிழ் வார்த்தைகளுக்கு 

என்னை அறிமுகம் செய்கிறாய்!

கருவானது 

நம் காதல்.
உருவானது 
ஒரு கவிதை.


குவிந்து குவிந்து விரிகிற 

உன் வார்த்தைகள்...

மலர்ந்து மலர்ந்து முறிகிற 
உன் இதழ்கள்...

விழுந்து விழுந்து நிமிர்கிற 
உன் நாணம்...

அறுந்து அறுந்து கோர்க்கிற 
உன் கூந்தல்...

ஒவ்வொரு 
கோணத்திலும் 
கவிதைகளால் உன்னை -
செதுக்கியே 

தீர்வதென்று சபதமிட்டுவிட்டது இதயம்.

நீ 

சிக்கெடுத்த மனசு 
மறுபடியும் -
உன்னாலேயே 
சிக்கிவிடுகிற நுட்பத்தை
கவிதைகள் சொல்லித் தருகின்றன.

ஒவ்வொரு 
கவிதையிலும்...
நீ 

உள்ளே வந்து 
என்னை முத்தமிட்டுத் திரும்புகிறாய் -
ஒரு தேவதையைப் போல...

விளக்கில் 

முட்டிமுட்டி உயிர்விடும் 
ஈசல்களைப் போல,

உன்னைச் 
சுற்றி சுற்றி வட்டமிட்டு உதிர்ந்து கிடக்கின்றன
என் வார்த்தைகள்.

வாழ்க்கை 

என்னை 
ரு இயந்திரத்தைப் போல நடத்துகிறது.


காதல் 
என்னை 
ஒரு குழந்தையைப் போல 
கைபிடித்து கூட்டிச் செல்கிறது.

சிலரை காதல் வழிமறிக்கும்.
சிலரை காதல் வழிநடத்தும.

என்னை என்ன செய்யும்?




திங்கள், 6 டிசம்பர், 2010


உன்னால் 

மட்டும்
எப்படி முடிகிறது?


நீ 

பேசாமலே 

உன்
நினைவுகளை
என்னோடு பேசவைக்க......!



வெள்ளி, 3 டிசம்பர், 2010

பிரிந்து போன 
நாளில் எல்லோரும்
கொடுத்தார்கள் நினைவு பரிசு..

நீ 
மட்டும் கொடுத்தாய் 
உன் நினைவுகளை
பரிசாக..,

விக்கலில் 

நான் தண்ணீர் குடிப்பதில்லை..,
நினைப்பது 

நீயாக இருந்தால் நீடிக்கட்டுமே..!!



வெள்ளி, 26 நவம்பர், 2010


மலரும் கற்பனைகளை 
கண்திறந்து கவிதையாக வடிக்கிறேன்.
நிமிஷங்களாக இனிக்கின்றன.


திங்கள், 22 நவம்பர், 2010

அவள் விரலுக்கு சொடுக்கு
எடுக்கும் போது
இப்படி கேட்டாள்..
உங்களுக்கு...
"காதல்..,முத்தம்..,அழகு..,
கவிதை..,
இதைதவிர வேறு எதுவும்
பேச தெரியாதா..?"என்று.

சொடுக்குவதை நிறுத்தி
"வேறு என்ன பேச உலகத்தில்
காதலை விட அழகாய் இருக்கிறது...
சரி நீ சொல்..
நான் அதை பற்றி பேசுகிறேன் என்றேன்..?!

ம்ம்ம்...ஒரு மாறுதலுக்காக
"உலக அரசியல்" பற்றி பேசுங்கள் என்றாள்.

அப்படியா..சரி
"அமெரிக்க அதிபர் ஒரு நாளில்..
அவர் மனைவியை
எத்தனை முறை முத்தமிடுவார்..?
என்றேன் கண்சிமிட்டி..

அய்யோ..கடவுளே..?! என்று
என் தலையை குட்டிகொண்டே இருந்தாள்
பிரிய காதலில்....




நீ 
என்னை காயப்படுத்திகொண்டே இருக்கிறாய்...

நானோ

உன்னை 
கவிதையாக்கி கொண்டே இருக்கிறேன்..! 



புதன், 17 நவம்பர், 2010

ன் 
நினைவுகளால் உறக்கம் தொலைத்தப் 

பல இரவுகளின்
காலப் பெருவெளியில்
இன்னும் கடந்துகொண்டிருக்கின்றேன்.




நான் ஆடை கிழிந்த
பைத்தியம் என்றுதான் எல்லோருக்கும் தெரியும்

ஆனால் 

யாருக்குத் தெரியும்
உன் நினைவுகளால் இதயம் கிழிந்த
காதலன் என்று..!



வெள்ளி, 12 நவம்பர், 2010

ஆயிரம் இழப்புகள்.... 
ஆயிரம் தோல்விகள்..... 
ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும் 

நான் நானகவே 
பிறக்க விரும்புகிறேன் 

என்னவளின் அன்புக்காக..,





திங்கள், 8 நவம்பர், 2010

சின்ன சின்ன
சிணுங்கல்கள்,

பூக்களின் புன்னகைகள்,

அறியாத தவறுகள்,

தலைக்கணமில்லா ஊடல்கள்,

சில்மிஷ கூடல்கள்,

உனக்கும் எனக்குமான
ஒவ்வொரு வினாடியும்
என்னுள் புகைப்படமாய்
புன்னகைக்கிறது.



திங்கள், 1 நவம்பர், 2010


என்னை 
தவிர வேறு யாரையும் 
நீ விரும்ப கூடாது என்பது 
என் சுயநலம் தான்....

ஆனால் 

என்னை 
போல வேறு யாரும் 
உன்னை இந்த அளவிற்கு விரும்பமாட்டார்கள் 
என்பது என் நம்பிக்கை..... 

முதல் முறை 
உன்னை 
நான் சந்தித்த நொடி எதுவென்று 
இன்றுவரை எனக்கு புலப்படவில்லை...... 

உன் 
அனுமதி பெற்ற பின்பே 
என் 
தாயின் கருவறை வந்தேன் 
என்று சொல்லி சிரித்தாய் ஒருநாள்......
மீண்டும் உன் அனுமதி பெற்ற பின்பே கல்லறை சென்று சேர வேண்டும், சொல்லி மகிழ்கிறேன் எனக்குள் இன்று......!

மனதினுள் நீயும்
உயிருக்குள் உன் நினைவும்
உன் உணர்வுகளுடன்
என் உணர்வும்
இருக்கும் போது
உன்னை மறப்பது
சாத்தியமா?

சாதனைதான்!!!
சிரிக்க மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
தவிக்கவும்
கற்று கொடுத்து விட்டாயே..
தினம் தினம்
ஒரு கவிதை எழுதுகின்றேன்
அதில் உன் நினைவுகளை தான்
தினமும் எழுதுகின்றேன்..

உன்னோடு வாழ்ந்த
காலங்களை விட
இன்று உன்
நினைவோடு வாழ்ந்த
காலங்கள் அதிகமாகிறது
தேடினேன் தேடினேன்
என் ஜீவன் தேயும் வரை
தேடினேன்..

ஆனாலும் -நீ
கிடைக்கவில்லை
உன்னை தேடும் விழிகளுக்கு
தினமும் ஏமாற்றங்கள் தான்
கிடைக்கின்றன
உன் பிரிவினால்!.






நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…
நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !


 
தீப்பெட்டியென நிலையாய்
உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது!

 
ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!


சனி, 30 அக்டோபர், 2010


து 
ஒரு முன் மழைக் காலம்…
மேகம் கொஞ்சம் கண் திறந்த நேரம்

என் முன் நீயும், 
உன் முன் நானும்
தனி தனி குடைகளின் கீழ் நின்றுகொண்டிருந்தோம் 



வல்லிய காற்று மெல்லிய
உன் கைகளில் இருந்த குடையைப் பறித்து
என்னிடம் அனுப்பியது,


ஒரு மின்னலைப் போல,

நீ அருகில் வந்தாய்

உன் 
குடையை மடக்குகையில் கவனித்தேன்
உன் 

மடக்கும் விழிகளை…

சட்டென்று 
ஒரு குட்டு 
என் இதயத்தில் விழுந்தது.


எங்கோ மறைந்திருந்த  
நம் காதல் வித்தின்மீது
முதல் மழைத் துளி விழுந்தது

என், 
உன் விழியிரண்டும் போட்ட
பார்வைப் பந்தலில் நம் காதல் படரத்தொடங்கியது

பின் வந்த அடைமழைக் காலம்…


பேருந்து 
நம் காதலுந்தானது

பேசத் தயங்கி 
மெளனம் பேசிய காலம்

தூரத்தில் இருந்தும் 
பார்வையால் நெருங்கிய நேரம்

நாம் மழையில் 
நனைந்தும் நனையவில்லை
குடைக்குள் இருந்தும் 

நனையாமல் இல்லை


மெளனம் உடைத்து காதல்
மொழியில் உருமாறிய தருணம்

நீ பேசிய முதல் வார்த்தைதான்
உன்னத காதலுக்கு உலை வைத்தது



அதன்பின் 
நாம் நம்
காதலைத் தவிர்த்து எல்லாம் பேசினோம் 

என்னைப் பற்றி, 
உன்னைப் பற்றி, நம்மைப் பற்றி…
காதல் அங்கே கழன்றுக்கொண்டது

நாம் ஒன்றாக இருந்தோம் 
காதலை தொலைத்து
எதிர்பார்ப்புகளை நிறைத்து



அது 
ஒரு இலையுதிர்க் காலம்…


மரங்களை 
இயற்கை மொட்டையடித்த பருவம்
நாமும் போட்டிருந்த சட்டைகளை உரிக்கத் தொடங்கினோம் 

இபோதுதான் தான் புரிகிறது

நம் 
மெளனம் தந்த அர்த்தத்தை

நாம் 
பேசிய எந்த வார்த்தையும் தரவில்லை

நம் 
பார்வைகள் தடுத்த  நெருக்கத்தை

நம் 
அருகாமை ஏதும் கெடுத்துவிடவில்லை
காதலுக்கு எதுவும் காரணம் தேவைப்படவில்லை

அதில் இருந்து விலகுவதாக நினைக்க மட்டும்
காரணம் தேவைப்பட்டது நமக்கு



காதலில்லாமல், 
காதலித்துவிட்டோமோ
என்பதற்காக வாழாமல் பிரிந்ததுதான்
நாம் 

காதலுக்குச் செய்த 
ஒரே மரியாதை!





நீ வேறு, நான் வேறல்ல
என்பதாய் வளர்ந்தது
நம் நட்பு


நினைத்துக் கூட
பார்க்கவில்லை
நீ என்னை
பிரிவாய்யென்று


என்னை நீ
மறந்ததை நினைத்து
துடித்துப் போகிறேன்!


எதை நினைப்பேன்
எதை மறப்பேன்


நான் உன்னை
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்


என் உயிரையும் தாண்டி
சென்று விட்டது
உன் நினைவுகள்


உன்னை மறப்பதா
என்னையே மறப்பதா
முடிவெடுக்க முடியாமல்
தவிக்கிறேன்


உன்னை மறக்க நினைத்தால்
என்னையே மறக்க செய்கிறது
உன் நினைவுகள்