சனி, 21 ஆகஸ்ட், 2010

உன்னைப் பார்த்த விழிகள் 
இன்று 
இமைக்க மறுக்கின்றன 
உன் பெயர் மாத்திரம் 
உச்சரித்த இதழ்கள் 
இன்று 
மௌனித்துப் போயின! 

உன் 
வரவுக்காக ஓடி ஓடி 
காத்திருந்த கால்களின் 
நடை தளர்ந்து போயின 


ஆனாலும் 


உனகாகவே காத்திருக்கும் 
என் 
இதயம் மட்டும் இன்னும் 
ஓயாமல் துடித்துக் கொண்டிருகின்றது 
உன் வரவுக்காக !

நிஜங்களின் நிழல்களில்
தேடித் திரிகிறேன்,
என் 

நினைவில் கரைந்த
உன் 

நினைவுகளை......

உனக்காய் வாழ்ந்த
நினைவுகள் ஊற்றெடுத்து
ஒப்பாரி வைக்கின்றன,
என் கண்களில்....

கடல் அலைகளில்
மிதக்கும் நுரைகள்
என்னை விலக்கிதள்ளுகின்றன,
நீயின்றி தனியே சென்றதால்......

என் 

பூங்காக்களின் பூக்கள்
வாடி மடிகின்றன...
உன் 

நினைவுகளற்று
நீர்த்துளி பட்டதால்......

பிறை நிலவில் 

உன் முகம்
தேடித் தவிக்கிறேன்,
ஒருமுறை காட்டிவிட்டுச் செல்...

இன்றும்,
முடிவிலது தொடர்கிறது
என் பயணம்...
கிடைக்காத 

உன்
நினைவுகளைத் தேடி......! 


ஒவ்வொரு 
வார்த்தையும் ஜனனித்தது 
உன்னால்
மொழியாகும்போழுது,

உன்னோடு 

பேசாத
ஒவ்வொரு வார்த்தையும்
கருவறை குழந்தையாகவே
என்னுள் வளர்கின்றது

பாறையின்மேல் பெய்துசெல்லும்
மழைத்துளிபோல பயனற்று
மடிகின்றேன், 

பசுமையில்லாமல்,

உயிர்க்குளிகூட வற்றிப்போனது
உன்பார்வை, 

உன்வார்த்தை,
உன்வருகை, 

உதயமில்லாதபோது..!



அன்பின் ஆழம் 
எவ்வளவு என்பது
பிரிவின் போதுதான் உணர முடியும்



அதை 


உணர்கிறேன் 
உன்னை சந்திக்காமல் இருக்கும் 
இந்த நிமிடங்களில்!
காலம் 
வரைந்த ஓவியத்தின் விளிம்புகளில், 
இன்னும் 
உன் நினைவுகள், 
சிதைந்து போன சுவடுகளாய்.. 

கற்களில் 
செதுக்கிய சிற்பங்களின், 
உடைந்து எஞ்சிய பாகங்களாய்.. 

நரைத்துவிட்ட தலை முடியின், 
கருமை மிஞ்சிய சோகங்களாய்.. 

இதயவரையின் மெல்லிய சுவர்களுக்குள், 
இன்றுவரை உயிரோடுள்ளது.. 

உனையே 
எண்ணி வாழ்ந்த தருணங்கள் கழிந்து, 
உன்னை 
எண்ணி வாழ்ந்த நிமிடங்கள் தொலைந்து, 
உன்னையும் எண்ணி வாழும் வாழ்க்கையாயிற்று... 

பாதங்கள் கொண்டு செல்லும் பாதை 
என் விதியாயிற்று.. 
சோகங்களே பாதங்களுக்குப் பாதணியாயிற்று.. 
உன் 
நினைவுகளே ஓய்வெடுக்கும் மர நிழலாயிற்று.. 

உனைக் காணவே உறங்கிய நாட்களுக்குப் பஞ்சமில்லை. 
உனக்கெனவே எழுதிய கவி வரிகளுக்கு எல்லை இல்லை. 

உன் 
நினைவுகள் 
என்னில் ஓய்வெடுக்கும் போது, 
என் 
மூச்சும் என்னிடம் ஓய்வூதியம் பெற்றுவிடும். 
இது உனை எண்ணி வாழும், 
உப்பற்ற வாழ்வாயினும்... 
உனக்காகவே வாழ்கிறேன்..

நான் 

எழுத நினைக்கும் போதெல்லாம்

நான் 

எழுத முயன்று தோற்கிறேன் - ஆம்

நீ 

எழுதப்படாத கவிதை!

உன்னை 
பார்த்த கண்ணையா...? 


உன்னை 
நினைத்த இதயத்தையா...? 


உன்னை
வரைந்த ஓவியத்தையா? 


இல்லை! 


உன் 
கனவால் 
கட்டிய கோட்டையா...? 


உன்
 நினைவால் 
எழுதிய கவிதையா...? 


உன் 
இதழால் 
சிரித்த சிரிப்பையா...? 


இல்லை! 


உன்னில் 
கலந்த உயிரையா...? 


உன்னில் 
தொலைந்த என்னையா...? 


உன்னில் 
மறைந்த காதலையா...? 

நீயே சொல்! 
எதை மறப்பது என்று...?

சனி, 14 ஆகஸ்ட், 2010

நீ 

சொன்னதெல்லாம்
கேட்பேன்  

என்பதற்காகவா
உன்னை மறந்து விடச்சொல்கிறாய்...

எதைப் பார்த்தாலும்
உன்னையே நினைக்கிறேன்
உன்னைப் பார்த்தால் மட்டும்
என்னையே மறக்கிறேன்..

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

புரிந்து கொள்ளப்படாத 
நாள்களின் 
வெறுமையான 
நாட்குறிப்பில் 
தாமாகவே வந்து 
அமர்ந்திருக்கிறது 


எனக்குப் 
பிடித்தமான 
உன் 
புன்னகை!