ஞாயிறு, 28 மார்ச், 2010

விழுந்துவிடுமேன்றுதான்
விரும்பினேன்,


ஒவ்வொரு
அலையும் தேடித்தேடி
ஓய்ந்துவிடுகிறது கரையில்..,


ஒடிந்துவிடுமென்றுதான்
பயந்தேன்.


ஒவ்வொரு
நாணலும்
வளைந்து நிமிர்ந்துவிடுகிறது காற்றில்..,


கரைந்துவிடுமென்றுதான்
கருதினேன்,


ஒவ்வொரு
கல்லும்
நனைந்து காய்ந்துவிடுகிறது மழையில்..,


மறந்துவிடுவேன் என்றுதான்
நம்பினேன்,


ஒவ்வொரு
நினைவலையும்
வந்துவடுவகிறது என் மனதில்..,
ஆரம்பத்தில்
ஆட்கொண்டு
ஆர்பரித்துபோன
அந்த ஒற்றை நதி


சிலகாலம்
சலனமற்றுபோன
தடம் மீதி இருக்க..,


நதி
எங்கே போயிற்று?
காதலே!


நீ
சிலருக்கு சிறை,
சிலருக்கு சுகம்,
சிலருக்கு சோகம்,
சிலருக்கு தவம்,
சிலருக்கோ அனுபவம்,


ஏன்
எனக்கு மட்டும்
நீ எப்போதும் சுமையாய் இருக்கிறாய்?
என்
கோபத்திற்கு காரணம்
நீயா? நானா?
இதுவரை தெரியவில்லை


பிடிக்கவில்லைஎன்றே
சொல்கிறேன்
உனக்கு பிடித்தவைகள்
எனக்கு பிடித்திருந்தும்..,


உலகத்தில்
எனக்கு பிடிக்காத
ஒரே ஜீவன் நீதான் என்கிறேன்


சந்திக்கவேண்டிய சந்தர்பங்களை
தவிர்த்தேவிடுகிறேன்


உன்
நினைவுகளின் சுவடுகளை கூட
நீக்கிவிட்டேன்


இன்றைய
உறக்கத்தோடு
உன் நினைவும்
உறங்கவேண்டும் என்றே
உறங்கபோகிறேன்


-ஆனாலும்


காலை கண்விழிப்பில்
வழக்கமான விடியலாய்
உன் புன்னகை!
உன்
புன்னகை போதுமென்று
நிறுத்திவிடாதே!


என்
கவிதைகள் நழ்டமாகிவிடும்!!.
ஒரு காதலை..,
அன்பை..,
தவிப்பை..,


நீ
ஏற்றுகொள்ளாமல் போகலாம்-ஆனால்
அலட்சியம் செய்தவள்தானே நீ!


அப்போது
என் கண்கள் பனிக்க
நெஞ்சு நடுங்க
வார்த்தைகளற்ற உலகத்தில் நின்றேன்!


அந்த கணம்
இதோ
என் கண் முன்னேவிரிகிறது


இதயதீபம்
படபடப்பான காற்றடித்து
சுடர் துடிக்கிறது
அது அணைந்துவிட கூடாதென
அத்தனை இதயங்களும் துடிக்கின்றன


என்னை
உலகமே அனாதையக்கபட்டதாய் உணர்தேன்


இத்தனை நாள்
எத்தனையோ சாத்தான்களால்
சபிக்கபட்டலும்,


இன்று மட்டும்
அத்தனை தேவதைகளாலும்
ஆசிர்வதிக்கபடுவேன்!

அப்பா

சுமந்தே பழக்கப்பட்டவன்
சுகமனாலும்,
சோகமானாலும்..,


என்
சொற்களின் கரைப்பட்டே
கருப்பானவன் நீ!


நீ
உயர்வாகவும் இல்லை,
தாழ்வாகவும் இல்லை.


நான்
என்னை மாற்றிகொள்ளாமல்
உன்னை மட்டுமே
குறை சொல்கிற
குருடனாய் இருந்திருக்கிறேன்


எப்போதாவது சந்திப்பேன்
நீ பட்டகாயங்களையும்,
சுமந்த சுமைகளையும்
அப்போது என்னுள்ளும்
மனிதாபிமானம் உயிர்தெழும்


உன் காலத்தில்
இழந்த இழப்புக்கள்
என்னை அதிகமாகவே பாதித்துவிட்டன


உனக்கு
என்னைவிட இழப்புக்கள் அதிகம்
என்பதை
அறியாது வளர்த்திருக்கிறேன்


உன்
கடைசி காலத்திலாவது
உன் சுமைகளை நான் ஏந்தி
உன் பாதங்களை சுமக்கிறேன்.
சிறகிலிருந்து பிரிந்த இறகு
ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிசெல்கிறது.
உன்னிடமிருந்து
கற்றுகொண்டது காதலை மட்டுமல்ல!
எனக்கான அர்த்ததையும்தான்


நாளை
உன்னை பெற,
தேடவேண்டிய எல்லாவற்றையும் தேடிக்கொள்வேன்,


அப்போது
நீ தொலைந்து போயிருப்பாய்


என்
வாழ்வையும் தொலைதிருப்பாய்,


அழுது,அழுது
கண்கள் சிவந்திருக்கும்..,


ஆறுதலுக்கு
எல்லாமே இருக்கும் -ஆனால்
எதுவும் ஆறுதலாய் இருக்காது
நானும் இருக்கமாட்டேன்.

சனி, 27 மார்ச், 2010

உன்
ஒவ்வொரு புன்னகையும்தான்!


உன்னை மறந்துவிட நினைக்கிற
என் நினைப்பை தள்ளிபோட்டுகொண்டுள்ளது!

வியாழன், 18 மார்ச், 2010

நீ
என்
காதலியாக இருந்தபோது
சாதித்ததைவிட..,

என்
தோழியாக இருக்கும் போது
சாதித்தவைகள் தான்

என்னை
யார்
என்று
உலகத்திற்கு உணரவைத்தது!

செவ்வாய், 16 மார்ச், 2010

எதையோ
அவசரமாய் தேடும்போது
நிதானமாய்
தொலைந்துபோகிறேன் நான்!

திங்கள், 1 மார்ச், 2010

உன்
அழகு மட்டும் அழகல்ல பெண்ணே!

நான்
தேர்வெழுத
நீ காத்திருந்த நிமிடங்கள் அழகு!

தெரியாமல் செய்த
தவறுக்கு தண்டனையாய்
என்னை உறவுகளே வெறுத்த பொழுது
உறவாய் வந்த
உன் நட்பு அழகு!

முதன்முதலாய்
தோற்று அழுத போது
உன்
தோலில் சாய்த்து
ஆறுதல் சொன்ன அப்பழுகற்ற மனசு அழகு!

என்
கனவுகளுக்காக
உன் இலட்சியங்களை விட்டு
என்னோடு வந்த தருணங்கள் அழகு!


சுகமில்லாமல்
நான் கிடக்க
கோவிலுக்கே போகாத நீ
எனக்காக பிரார்த்தித்த
அந்த காலங்கள் அழகு!


வாழ்வே முடிந்ததாய்
உடைந்து விழுந்தபோது
ஊரே கைகட்டி நிற்க

உன்
கண்கள் கலங்க
ஓடோடிவந்து
வாழ்வு தந்த உன் தியாகம் அழகு!