சனி, 1 அக்டோபர், 2011

அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்

எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு

பிழையின்றி தமிழ்
எழுத தெரியாத என்னை
கவிஞனாக்கவே வந்து
தொலைத்திருக்கிறது காதல்.


செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்,

என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்!


எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்!

உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு.


செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அன்று
மழை பெய்யும் நேரங்களில்
என்னை நினைப்பதாய் சொன்னாய்!

இன்றும் 
மழை பெய்கிறது
நான் உன்னை நினைக்கிறேன் 

நீ
என்னை நினைப்பாயா?





திங்கள், 21 பிப்ரவரி, 2011

இறக்கவும் விடவில்லை,
இருக்கவும் விடவில்லை,

என்னதான் 
வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?




எத்தனை 
காதல் கடந்து வந்தாலும்

உன் 
இதயம் மட்டும் தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.








ஒவ்வொரு முறையும்
மறக்கத்தான் நினைக்கிறேன்
கன்னங்களில் வழியும் கண்ணீரை
துடைத்த பின்…

காதலை எந்த
வடிவில் கண்டாலும்
மறுபடியும் கண்ணீர்
வருவதை ஏன் என்னால்
தடுக்க முடிவதில்லை?


ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

கூடு திரும்பாத பறவை நீ!

கூண்டை  
கட்டி  முடிக்க கடைசி  சுள்ளிக்காகப் பறந்த  
பறவை 
கூடு  திரும்பாததுபோல 


நீ!


வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

I miss U (16-02-2011) wednesday


நாட்கள் நகர்கின்றன
வாரங்களும் ஓடுகின்றன
மாதங்களும் வழிந்தோடுகின்றன!

நினைவுப் புதையலில் மட்டும்
அள்ள அள்ளக் குறையாமல் நீ!
நகரவும் இல்லை, வழிந்தோடவுமில்லை

எல்லாமே மாறுகின்றன
என்னைச் சுற்றி...
என் மனமோ உன்னைச் சுற்றி..
அழுத்தமாய் பற்றி..!

திருவிழாக் கூட்டத்தில்
தனித்துவிடப்பட்ட தலைமகன் நான்!
தொலைத்தவள் நீ.....

தேம்பியழ வழியில்லை..
அழுது புலம்ப வகையுமில்லை!

முகம் முழுவதும் புன்னகை; ஆனால்
விரக்தியின் லேசான தீற்றலில் கண்கள்!

உள்ளங்கையில் திட ரேகைகள்; ஆனால்
உள்ளமெங்கிலும் கவலை ரேகைகள்!

நடையினில் கம்பீரம் குலையவில்லை; ஆனாலும்
நடுக்கத்தின் நாற்றாங்கால் செழிப்பாய் இருக்கிறது!

வெளிச்சமாய் வண்ணமயமாய் இருக்கிறது உலகம்!
இருளாய் மாயைகள் நிறைந்ததாய் இருக்கிறது மனவுலகம்!




ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தொலைந்து போன
என் இதயத்தினுள்
தொலையாத நம்காதலால்
தினம்
தொலைத்து கொண்டிருக்கிறேன்
என் இரவுகளை,

அதில் தேடிக்கொண்டிருக்கிறேன்
அதன் கனவுகளை,

நாம் பிரிந்தபிறகும்
பிரியாத என்காதலால்
பிரிக்க முடியாத
நினைவுகளுக்குள் சிக்கி
தினம் தினம்
பிரியாவிடை கொடுத்து
மீள்கிறது என்உயிர்,

இமை மூடாமலேயே
இரவுகள் என்னை
விரட்டுகிறது விடியலுக்கு,

உணர்ச்சியற்ற விழிகளில்
கண்ணீர்த்துளிகள் கூட
எதிர்பார்ப்புடன்
ஒரு துளியையேனும்
உன் கரம்
தாங்காத என்று,
ஓடி ஒழிக்கிறேன்

அங்கும் இங்கும்,
என்ன செய்வது
உயிருக்குள் ஒலிக்கும்
கேள்விகளிடம் இருந்து
தப்பிக்க வழிதெரியவில்லை,

இருந்தும்
சுகமான சுமைகளாக
சுமக்கிறது
என் இதயம்
உன்னை அல்ல
உன் நினைவுகளை...,




வியாழன், 6 ஜனவரி, 2011


இரவுகளின் நீளத்தோடு
இதயத்தின் வழியும்
இப்போது
நான் உணருகிறேன்,

கண்களில்
சிறகடித்த கனாக்கள்
கனவுகளாகவே போக
என் இதயம்
இரத்தக்கண்ணீர் வடிக்கிறது,

உறங்க மறுத்த
உள்ளம் - ஓராயிரம்
உள்ளக் குமுறலை
உதிர்த்து கொண்டிருக்க
நிம்மதி
தொலைதூரம் தொலைந்துபோனது,

விழிகளை
திறந்தாலும் முடினாலும்
கடந்துசென்ற நினைவுகள்
என்னை
காயப்படுத்தி செல்கின்றன,

பாசம்வைத்த இதயங்களுக்கு
பிரிவுகளும் கண்ணீரும்தான்
காலத்தின் சன்மானமா?.


திங்கள், 3 ஜனவரி, 2011


12 வருடத்திற்கு 

ஒரு முறை பூக்கும் குறுஞ்சி மலர் கூட..

உன் 

புன்னகை பார்த்தால் 

ஒரு நாளைக்கு 12 முறை பூக்கும்..