செவ்வாய், 22 ஜூன், 2010

என்னையே 
ரசிக்காத நான்! 


எதையெதையோ 
ரசிக்கின்றேன் உன்னால்!

நீ இரக்கக் காரி தான் ...

நான் கேட்காமலயே
கொடுக்கிறாயே சந்தோசங்களை...
அதனால் தான் என்னவோ

உன்னிடம் வாங்கிய
காதலின் கணத்தை

எந்தப் பெண்ணிடமும் இதுவரை
பார்த்ததில்லை!

வெள்ளி, 18 ஜூன், 2010

காதல்
பாடல்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல்
நினைவில் வந்தாய்

காதல்
வசனங்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல்
நினைக்க வைத்தாய்

காதல்
ஓவியங்களைப் பார்க்கும் போது
காரணமில்லாமல்
கனவாய் வந்தாய்

அப்போது
புரியவில்லை

காதலிக்க காரணம் தேவையில்லை என்று

இப்போது புரிகிறது
காரணத்தோடு வந்தால்

அது காதல் இல்லை என்று!

செவ்வாய், 15 ஜூன், 2010

நாம்
சேர்ந்து நடக்கையில்
நம் இருவர்
விரல்கள் உரசிகொண்டதைதான்




கவிதைகளாக
எழுதிகொண்டிருக்கிறேன்
என் பக்கங்களில்!

சனி, 5 ஜூன், 2010


அவள் போட்ட
கோலத்தை விட

அதை

சுற்றி இருந்த
அவள் பாதங்களே
அழகு...!

தரை தொடாத
விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...

அவள் கூந்தலில்
ஒற்றைரோஜா


முதல் மழையை
வானத்தை பார்த்து
நான் ரசிக்க..,


எதிர்பாராமல்
நீ கொடுத்த
அந்த
முதல் முத்தம்
இன்னும் ஈரமாக
என் கன்னத்தில் !

முதல் முத்தம்
நினைவு கூறும் போதெல்லாம்
கைகளால் முகத்தை மூடுகிறாய்
விரல் இடுக்கில்
வழிகிறது நாணம்...!


காதல் பற்றி
எழுதிய கவிகள்,
எல்லாமே கடலில்
இட்ட கடுகு
போன்றது...!

காதல் ஒண்ணும்,

அடைப்பு குறிக்குள்
அடைக்கும்
வார்த்தைகள்
இல்லை....!

அம்பு குறி இட்ட சிவப்பு
ஈர இதயமும் இல்லை....

அடி கோடு இட்ட
வாக்கியமும் இல்லை....

இத்துணை சொல்லி விட்டு,
நான் எப்படி விளக்குவது... காதலை?,
காதல் கொள்ளுங்கள்........
அதை யாருக்கேனும், விளங்க வைக்க
உங்களுக்கேனும் முடிகிறதா
பார்ப்போம்.....!


உதடு பிரியா
புன்னகை !


ஆடம்பரமில்லா
வெட்கம் !

எளிமையான அந்த
குறும்பு பார்வை !

உன்னை போல்
உலகில் ஒன்பது பேரெல்லாம்
நிச்சயமாய்
இருக்க முடியாது ....


நினைவாற்றலை
வளர்க்க விரும்பினேன்
என் நினைவுகள் உன்னை சுற்றுவதால் !

ஆகாயத்தின் மேல்
உன்னை வர்ணிக்க விரும்பினேன்
காகிதத்தின் நீளம் , அகலம் பத்தாததால் !

தேன்
சுவையானது தான்
இல்லை என்று யார் சொன்னது ?
உன் எச்சில் சுவைக்காத வரை !
பூக்களில் வரும் வாசனை அற்புதமாக
தோன்றவில்லை
உன் வாசம் கண்டதால் !

உன் சிரிப்பு
உண்மையிலேயே அழகுதான்
இல்லை என்றல் அதை பார்க்க
இவ்வளவு ஆர்வம் வருவது ஏன் ?


புதன், 2 ஜூன், 2010

என்னை
நான் மறக்க

இருவர் போதும்
ஒன்று நீ!
இன்னொன்று கவிதை!!.