திங்கள், 27 டிசம்பர், 2010


தூங்கும் போது
மட்டுமல்ல

இமைக்கும் போதும்
வந்து போகும்
புயல்வேக கனவு

நீ!.


செவ்வாய், 21 டிசம்பர், 2010


நீ 
என்னருகில் வருகையில் 
என்னை சுற்றியுள்ள 

அனைத்து உயிர்களும் 
உயிரற்று போகிறது,

என்னையும் சேர்த்து…  

பெண்ணே 
உன் உதடுகள் பேசும் 
அழகை விட 

இமை திறந்து பேசும் விழிகளே 
எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது.


வெள்ளி, 17 டிசம்பர், 2010


கரையும் பனித்துளிபோல,
மறையும் மழைத்துளிபோல
தொலைத்துவிட
முடியவில்லை,

உன்னோடு 
இணைந்த
என் 
உறவையும்,
நினைவுகளையும்.



நீயில்லையென்றால்.......

காற்றுச் சுடும்
விழிகலோடு முரண் பட்டு
தூக்கம் வெளிநடப்புச் செய்யும்

உன் கடித வரிகளை
மேய்ந்து மேய்ந்தே
ஆயுளில் பாதி தேய்ந்து போகும்

நீயில்லையென்றால்
என் கவிதைகளெல்லாம்
அப்போ
இறந்தே பிறக்கும்

பசியை துக்கமும்
சந்தோஷங்களை தனிமையும்
துரத்திக் கொண்டேயிருக்கும்

உன் சிரிப்புக்களை
கனவுகளாய் சேமித்து வைத்த
இதயம்
அதை கண்ணீர் பூக்களாய்
செலவு செய்யும்

சந்தோஷம் என்பது – அப்போ
என் கடந்து போன
பக்கங்களில் மட்டுமே
எழுதப்பட்டிருக்கும்

வாழ்க்கை
உன் நினைவுகளாய் இருக்கும்
நெஞ்சு,
நினைவுகளோடு மட்டுமே
குடும்பம் நடத்திப் பார்க்கும்

நிலா கூட
ஒளியை
என்னை தவிர்த்து
பொழிவதாகவே படும் எனக்கு

ஜீவிதம் தூரமாகும்
இறப்பு மட்டும்
என்னை
சில இமைத்துடிப்பின் இடைவெளிகளில்
காத்துக்கிடக்கும்

நீயில்லையென்றால்
அறிவு
இரண்டும் இரண்டும் ஆறு என்று
தப்புத் தப்பாய் கணக்குப்போடும்

வானம் கீழிறங்கும்
ஆணலை பெண்ணலையை
விரட்டிப்பிடிக்கும்
ஒளியிழந்த சூரியன்
விறகடுப்பில் குளிர்காயும்

இன்னும்
எதுவெதுவோ நடந்து போகும்……
நீயில்லையென்றால்.



புதன், 15 டிசம்பர், 2010


காதல் 
என்ற வார்த்தையை
கேட்டு கேட்டு அதன்மேல்
என்னவோ தெரியவில்லை
ஒரு வகையறியா பாசம்!



காதலியே இல்லாமல்
காதல் கவிதையா.......?

கற்பனை கூட கடுப்பாகி
காரியுமிழ்ந்துவிடும்....



கவிதைக்காக இல்லாவிட்டாலும்
காலத்தின் ஓட்டத்தில்
என்னை கனிவோடு
காதலிக்க காதலியை
தேடிகொண்டிருக்கிறேன்..



பார்கின்ற 
பெண்ணையெல்லாம்
ஒப்பிட்டு பார்க்க்கிறேன்

கண்ணுக்குள் 
உள்ள காதலியோடு
ஒவ்வொரு ஒப்பிட்டுக்கு பின்னும்
உள்ளுக்குள்ளே சொல்லி கொள்கிறேன்...

அவளிடம்....

நீ அவள் இல்லையென்று.



செவ்வாய், 7 டிசம்பர், 2010

கடல் நுரையில் 
பிறந்தவளாம் காதல் கடவுள் வீனஸ்!

நீயோ 
கடல் நுரையாகவே பிறந்திருக்கிறாய்!

உன்னோடு 

நடக்கும்போது மட்டும் -
கால்கள் வலிப்பதே இல்லை.

கண்கள் 
நேர்கோட்டில் செல்கின்றன.

உதடுகள் 
ஊமையாகின்றன.

காதல் 
எனக்கு 
கற்றுத் தந்தது எல்லாம் -

காதலியே! 
நான் 
உன்னிடமிருந்து கற்றவைதான்.

வார்த்தைகளுக்கு 

திடீர் பஞ்சம்.
உன்னை 

வர்ணிக்கத் துவங்குகிறேன்.

வார்த்தைகள்
மீண்டும் வட்டமிடுகின்றன.
புதிய தமிழ் வார்த்தைகளுக்கு 

என்னை அறிமுகம் செய்கிறாய்!

கருவானது 

நம் காதல்.
உருவானது 
ஒரு கவிதை.


குவிந்து குவிந்து விரிகிற 

உன் வார்த்தைகள்...

மலர்ந்து மலர்ந்து முறிகிற 
உன் இதழ்கள்...

விழுந்து விழுந்து நிமிர்கிற 
உன் நாணம்...

அறுந்து அறுந்து கோர்க்கிற 
உன் கூந்தல்...

ஒவ்வொரு 
கோணத்திலும் 
கவிதைகளால் உன்னை -
செதுக்கியே 

தீர்வதென்று சபதமிட்டுவிட்டது இதயம்.

நீ 

சிக்கெடுத்த மனசு 
மறுபடியும் -
உன்னாலேயே 
சிக்கிவிடுகிற நுட்பத்தை
கவிதைகள் சொல்லித் தருகின்றன.

ஒவ்வொரு 
கவிதையிலும்...
நீ 

உள்ளே வந்து 
என்னை முத்தமிட்டுத் திரும்புகிறாய் -
ஒரு தேவதையைப் போல...

விளக்கில் 

முட்டிமுட்டி உயிர்விடும் 
ஈசல்களைப் போல,

உன்னைச் 
சுற்றி சுற்றி வட்டமிட்டு உதிர்ந்து கிடக்கின்றன
என் வார்த்தைகள்.

வாழ்க்கை 

என்னை 
ரு இயந்திரத்தைப் போல நடத்துகிறது.


காதல் 
என்னை 
ஒரு குழந்தையைப் போல 
கைபிடித்து கூட்டிச் செல்கிறது.

சிலரை காதல் வழிமறிக்கும்.
சிலரை காதல் வழிநடத்தும.

என்னை என்ன செய்யும்?




திங்கள், 6 டிசம்பர், 2010


உன்னால் 

மட்டும்
எப்படி முடிகிறது?


நீ 

பேசாமலே 

உன்
நினைவுகளை
என்னோடு பேசவைக்க......!



வெள்ளி, 3 டிசம்பர், 2010

பிரிந்து போன 
நாளில் எல்லோரும்
கொடுத்தார்கள் நினைவு பரிசு..

நீ 
மட்டும் கொடுத்தாய் 
உன் நினைவுகளை
பரிசாக..,

விக்கலில் 

நான் தண்ணீர் குடிப்பதில்லை..,
நினைப்பது 

நீயாக இருந்தால் நீடிக்கட்டுமே..!!