சனி, 31 ஜூலை, 2010


உன்னை

பிரிந்து

எப்போது தனிமைக்கு
வந்தேனோ


அன்றிலிடருந்து உனர்கிறேன்
உன்னை விட வேறு யாரும் என் மீது
இவளவு நெசம் வைக்க முடியாது என்பதை

அன்பெடுத்து அம்பு செய்து
ஆழமாய் தைத்தாய்.
அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?

ஓட்டை விழுந்த இதயத்தின்
ஒழுகும் குருதியை உன்
ஒற்றை முத்தத்தில்
உதடுகளுக்கு  சாயம் பூசுவாய்.

துடிக்கும் இதயத்தை துப்பட்டாவால்
துடைத்துக் கட்டுவாய்.
அமில மழையில் அல்லாடும் 
அக்கினி பறவையின் சிறகு வாங்கி
ஆறாத காயம் ஆற்றுவாய் .

வளையல்கள் நொறுக்கி  
கொலுசு மணிகளை குலுக்கி
இதயத்தின் இட வலது 
இருபக்கமும்  
இறுக்கிக் கட்டி எந்நேரமும்
இனிமையாய் இம்சிப்பாய்.

பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.

ஒவ்வொரு பகலின்
ஆரம்பத்திலோ,  
அல்லது இரவின்
தொடக்கத்திலோ
தூக்கம் என்ற ஒன்றை 
தொல்லையாக்குவாய். 

சேற்றுக்குள் புதைந்திருக்கும்
கலப்பை போல என் 
சோற்றுக்குள் புதைந்து கொண்டு 
தொண்டைகுழியில் குத்துவாய்.

உன் வியர்வை துளியை
விலைக்கு கேட்கவும் 
கண்ணீர் துளியை
தொலைக்க கேட்கவும் 
செய்வாய். 

கண்விழிக்க கனவு காட்டி
காகிதங்களை நீட்டி நீயே அதில்
கவிதையாவாய்.

ஊருக்கும் பெருக்கும் மட்டும்
உருவாய் விட்டுவிட்டு
உனக்கானவனாய் என்
உயிர்  மட்டும் மாற்றுவாய்.

இவ்வளவுதானே....
இதையெல்லாம் எப்போது
செய்வதாய் உத்தேசம்??

செவ்வாய், 20 ஜூலை, 2010

என்னுள் நீ

மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்..,


என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!

சனி, 17 ஜூலை, 2010


உயிர் அடங்கும் 

அந்த நாளில்
நினைவுகள் அடங்கிவிடும்....

நினைவுகள் அடங்கும் 

அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே.........

நீண்ட நாள் 

உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது!


உன் 

நிழலாய் 


உன்னைப்
பின் தொடர்ந்து வர
விருப்பம் இல்லை..

உன் கை
கோர்த்து
இருக்கவே ஆசைப்படுகிறேன்..
இருளில் கூட


நீ
என்னைத்
தொலைக்காமல் இருக்க...

ஞாயிறு, 4 ஜூலை, 2010

தொலைபேசி
இணைப்பை துண்டித்து
பல நிமிடம் கடந்த பின்பும்
இன்னும் ஓங்கி
ஒலித்துகொண்டே இருக்கிறது .

உன் இதழ்கள் 
உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
 நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
என் அறையெங்கும் !






இதய புத்தகத்தின்
முதல் பக்கத்தில்
கிறுக்கிவைத்த
உன் பெயரை

ஒரு தடவையாவது
வாசிக்காமல்
கண்கள் உறங்குவதில்லை.