சனி, 30 அக்டோபர், 2010


து 
ஒரு முன் மழைக் காலம்…
மேகம் கொஞ்சம் கண் திறந்த நேரம்

என் முன் நீயும், 
உன் முன் நானும்
தனி தனி குடைகளின் கீழ் நின்றுகொண்டிருந்தோம் 



வல்லிய காற்று மெல்லிய
உன் கைகளில் இருந்த குடையைப் பறித்து
என்னிடம் அனுப்பியது,


ஒரு மின்னலைப் போல,

நீ அருகில் வந்தாய்

உன் 
குடையை மடக்குகையில் கவனித்தேன்
உன் 

மடக்கும் விழிகளை…

சட்டென்று 
ஒரு குட்டு 
என் இதயத்தில் விழுந்தது.


எங்கோ மறைந்திருந்த  
நம் காதல் வித்தின்மீது
முதல் மழைத் துளி விழுந்தது

என், 
உன் விழியிரண்டும் போட்ட
பார்வைப் பந்தலில் நம் காதல் படரத்தொடங்கியது

பின் வந்த அடைமழைக் காலம்…


பேருந்து 
நம் காதலுந்தானது

பேசத் தயங்கி 
மெளனம் பேசிய காலம்

தூரத்தில் இருந்தும் 
பார்வையால் நெருங்கிய நேரம்

நாம் மழையில் 
நனைந்தும் நனையவில்லை
குடைக்குள் இருந்தும் 

நனையாமல் இல்லை


மெளனம் உடைத்து காதல்
மொழியில் உருமாறிய தருணம்

நீ பேசிய முதல் வார்த்தைதான்
உன்னத காதலுக்கு உலை வைத்தது



அதன்பின் 
நாம் நம்
காதலைத் தவிர்த்து எல்லாம் பேசினோம் 

என்னைப் பற்றி, 
உன்னைப் பற்றி, நம்மைப் பற்றி…
காதல் அங்கே கழன்றுக்கொண்டது

நாம் ஒன்றாக இருந்தோம் 
காதலை தொலைத்து
எதிர்பார்ப்புகளை நிறைத்து



அது 
ஒரு இலையுதிர்க் காலம்…


மரங்களை 
இயற்கை மொட்டையடித்த பருவம்
நாமும் போட்டிருந்த சட்டைகளை உரிக்கத் தொடங்கினோம் 

இபோதுதான் தான் புரிகிறது

நம் 
மெளனம் தந்த அர்த்தத்தை

நாம் 
பேசிய எந்த வார்த்தையும் தரவில்லை

நம் 
பார்வைகள் தடுத்த  நெருக்கத்தை

நம் 
அருகாமை ஏதும் கெடுத்துவிடவில்லை
காதலுக்கு எதுவும் காரணம் தேவைப்படவில்லை

அதில் இருந்து விலகுவதாக நினைக்க மட்டும்
காரணம் தேவைப்பட்டது நமக்கு



காதலில்லாமல், 
காதலித்துவிட்டோமோ
என்பதற்காக வாழாமல் பிரிந்ததுதான்
நாம் 

காதலுக்குச் செய்த 
ஒரே மரியாதை!





நீ வேறு, நான் வேறல்ல
என்பதாய் வளர்ந்தது
நம் நட்பு


நினைத்துக் கூட
பார்க்கவில்லை
நீ என்னை
பிரிவாய்யென்று


என்னை நீ
மறந்ததை நினைத்து
துடித்துப் போகிறேன்!


எதை நினைப்பேன்
எதை மறப்பேன்


நான் உன்னை
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்


என் உயிரையும் தாண்டி
சென்று விட்டது
உன் நினைவுகள்


உன்னை மறப்பதா
என்னையே மறப்பதா
முடிவெடுக்க முடியாமல்
தவிக்கிறேன்


உன்னை மறக்க நினைத்தால்
என்னையே மறக்க செய்கிறது
உன் நினைவுகள்



ஞாயிறு, 24 அக்டோபர், 2010


உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான 

என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.



சனி, 23 அக்டோபர், 2010

நான்
உன்னிடம்
சொன்ன காதல்,


ஒரு நாள் வாழும்
நாளிதளாய்,


உன் காலடியில்
கசங்கி வீழ்ந்தாலும்,


வலிகள் நிறைந்த

அந்த நினைவுகள்,

ஆட்டோகிராபாய்


என்றென்றும்
நிலைக்கும்! 










வியாழன், 21 அக்டோபர், 2010

உன்னுடன் 
சேர்ந்தே நடந்த நான்,


இன்று
நீயில்லாமல் 
தனிமையில் நடக்கையில் 
கால்கள் மட்டுமல்ல!
இதயமும் வலிக்கிறது!!.



புதன், 20 அக்டோபர், 2010

என் உள்ளங்கையில்
ஆயுள் ரேகையை
தேடிப் பார்த்த படி…

உள்ளத்தில் பொங்கியெழும்
உன் நினைவுகள் சுமந்து
மௌனங்களோடு மட்டுமே
நிமிடங்கள் கழிகின்றன!

நீ எனக்கும் தெரியாமல்
சிக்கும் எடுக்காமல்
பிய்த்துக் கொண்டு
போய் விட்டாய்!

ஏனென்றும் தெரியவில்லை
விடை காணவும் முடியவில்லை!

ம்…!
நாட்களையும் பொழுதுகளையும்
வெறுமையான பக்கங்களோடு புரட்டியபடி…

சுடும் கண்ணீரில்
கவிதைகள் எழுதி
கவிதைகளில் கப்பல் செய்து
கடல் நீரில் மிதக்க விட்டு
கண்ணீரோடு காத்திருக்கின்றேன்!

ஏதாவது ஒரு கவிதை
உன் கரம் கிடைத்து
என்றாவது ஒரு நாள்
என்னைத் தேடி
வருவாயென்ற நம்பிக்கையில்
உன் வரவுக்காய்
தினமும் என் தவமிருப்பு!






செவ்வாய், 19 அக்டோபர், 2010

ஓரிரு முறை உன்னை
நினைத்து சிரித்தால் தான்
என்னவோ

உன்னை நினைக்கும்
போதெல்லாம்
அழ வைக்கிறாய்..,







உயிரே…!
சில்லறையாய் சிதறும்
உன் சின்னச் சின்னச் சிரிப்பெல்லாம்
இன்றும் என்னுள் சில்லிட்டுச் செல்கிறது!

தூரிகை குழைத்து
வர்ணக் கலவையில் கலந்து
நான் எழுதிய கவிதைகளிலெல்லாம்
என்மன வெற்றிடங்களை நிரப்பி
வழிந்தோடிய கருவாய்
தொடர்ந்து நிறைந்திருந்தது நீதான்!

காற்றில் உனது
ஈரப்பதம் உலரும் முன்னே
உன்னோடு பின்னோடி வந்த
எனது எண்ணங்கள்
உன்னோடு மட்டும்
ஒட்டிக் கொண்டது!

உன் இதயத்தில்
இப்போதும் நான் இருக்கின்றேனோ…?
இது கூடத் தெரியவில்லை.

ஆனால்
எனது இதயத்தில்
உனக்காய் ஓரிடம் ஒதுக்கி
நம்பிக்கைச் சின்னம் ஏற்றி
உன்னை நான் – இன்றும்
நேசித்துக் கொண்டிருக்கின்றேன்!

காலத்துக்குத்தான்
எத்தனை அவசரம் பார்த்தாயா…?

நாட்கள் மாதங்களை விழுங்கி
மாதங்கள் வருடங்களை விழுங்கி
வாழ்வின் விளிம்பில் இப்போது நான்!

உனை நிரந்தரமாய்
பிரியப் போகும் இவ்வேளையில்
என் உள்ளத்தின் உள்ளே
ஏதோ ஓர் சோகம்
அலைமோதி எழுகிறது!

முகவரிகள் தெரிந்திருந்தும்
முகங்கள் காணாதவர்கள் நாம்
இப்போதாவது
உன் முகத்திரை விலக்கி
உன் முகம் காட்ட மாட்டாயா…?

கல்லறைக் கவிஞன்
உனக்காய்
கண்ணீரால் எழுதும்
கடைசிக் கவிதை இது!

என் பரிசுத்தமான நேசத்தின்
பாசத் தவிப்பினையும்
வேசங்கள் போடாது
வேகித் தவித்ததையும்
வேதனைகள் தீரும் வரை
அழுது நான் தீர்க்க வேண்டும்!

கல்லறைக் கவிஞன்
உனக்காய்
கண்ணீரால் எழுதும்
கடைசிக் கவிதை இது! 



செவ்வாய், 12 அக்டோபர், 2010


சுற்றி வந்த காற்றும்,
பற்றி வந்த கரங்களும்,
அதே பசுமையான நினைவுகளுடன்.


பார்த்து மகிழ்ந்த காட்சிகளும்,
கேட்டு ரசித்த கானங்களும்,

அதே இனிமையான சுவைகளுடன்.


நடந்து திரிந்த பாதைகளும்,
புரண்டு அழுத தோள்களும்,
அதே ஏக்கமான எண்ணங்களுடன்.


எழுதி வடித்த கவிதைகளும்,
புழுதி அடித்த மழைச்சாறலும்,
அதே மண் வாசனையுடன்.


புரட்டிப் படித்த கதைகளும்,
விரட்டிப் பிடித்த விண்மீன்களும்,
அதே கண் சிமிட்டல்களுடன்.


தொட முயன்ற நிலவு,

தொட முடியாமலும்,
விட முடியாத நம் உறவைப்போல்......
தொடர்கதையாய்!







சனி, 9 அக்டோபர், 2010


மயிலிறகு சேகரிக்கும்
உனக்குத் தெரியுமா…
காற்றில் உதிரும்
உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்து செல்வது!




உறங்கிக் கொண்டிருக்கும்போதே உன் கனவு பலித்ததுண்டா?
நான் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பின்னிரவில்தான்
உன் குடும்பம் எதிர்வீடு புகுந்தது!
பழகிய ஒரே வாரத்தில்
என் வீட்டு சமையலறை வரை வருகிறாய்!
எப்போதும் உன்வீட்டு வாசல்படி தாண்டியதில்லை நான்!
என் அம்மாவிடம் கதையளக்கிறாய்…
என் அப்பாவிடம் பேசுகிறாய்…
என் தங்கையிடம் விளையாடுகிறாய்…
என்னை மட்டும் பார்க்கிறாய்!
அடுத்த வாரமே கலந்தாய்வு*க்கு ஒன்றாய்ப் பயணிக்கிறோம் !
மறு வாரமே ஒரே கல்லூரியில் சேர்கிறோம்!!
ஒருமுறை தானே இயற்கை வரம் தரும்…
வாரா வாராம் தருமா என்ன?
அந்த ஒருமாதமும்
கோடை விடுமுறையல்ல…
கொடை விடுமுறை!
என் வீட்டில் எல்லோரிடமும் பேசுகிற நீ!
உன் வீட்டில் யாரிடமும் பேசாத நான்!
நம்முடன் பேசியும் பேசாமலும் நாம்!
முதலாமாண்டு எதிர்வீட்டுப்பெண்ணாய்…
இரண்டாமாண்டு கல்லூரித்தோழியாய்…
மூன்றாமாண்டு நலம்விரும்பியாய்…
என் இதயவாசல்கள் ஒவ்வொன்றாய்த் திறந்து உள்நுழைகிறாய்!
மூன்றாண்டுகளாக…
எதையெல்லாமோப் பேசி தீர்த்த நாம்
இறுதியாண்டு முழுதும் காதலைப் பற்றியே பேசியதன்
காரணம் அப்போது தெரியவில்லை!
காதலைப் பற்றிய உன் எண்ணங்களை
முழுதாய் அறிந்து கொண்டபோதும்
உன்னை மனைவியாக அடையப் போகிறவன்
கொடுத்து வைத்தவன் என்றே
நினைத்துக் கொண்டது என் மனது!
பின்னொரு நாள்
என் கவிதைகளை வாசித்து விட்டு
என்னைக் கணவனாய் அடையப் போகிறவள்
கொடுத்து வைத்தவள் என்று நீ சொல்ல
மெல்லிய சலனம் எனக்குள்!
அதன்பிறகு
என் மீது நீ அக்கறை கொள்ளும்
ஒவ்வொரு நிகழ்விலும்
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைந்து கொண்டிருந்தது
உன் மீது நான் கொண்டிருப்பது
நட்புதான் என்ற என் நம்பிக்கை!
எப்போது, எப்படி, எதனால்
என்கிற கேள்விக்கெல்லாம்
பதில் சொல்லாமல்
நம் நட்புக்குள்ளே
சத்தமில்லாமல் மெதுவாய்
நுழைந்து கொண்டிருந்தது
என் காதல்!
ஒருநாள் பழைய நண்பனிடம்
உன்னை அறிமுகப் படுத்துகையில்
உதடு சொன்னது – “எதிர் வீட்டுப் பெண்”
உள்ளம் சொன்னதோ – “எங்க வீட்டுப் பெண்”
மின்சாரம் இல்லாத அந்தப் பௌர்ணமி இரவில்
மொட்டை மாடியில் கூடியிருக்கிறது குடும்பம்…
என்னிடம் தனியாக கேட்கிறாய்…
“ஒரு கவிதை சொல்லு”
“எதைப் பற்றி?”
“ம்ம்ம்… என்னைப் பற்றி?”
“சுடிதாரிலும் வருகிறாய்…
தாவணியிலும் வருகிறாய்…
நீ புதுக் கவிதையா? மரபுக் கவிதையா?”
“ம்ம்ம்… காதல் கவிதை!”
மின்சாரம் வந்தது!
நீ மறைந்து போனாய்…
எனக்கேத் தெரியாமல் நானுன்னைக் காதலிக்க…
உனக்கேத் தெரியாமல் நீயென்னைக் காதலிக்க…
காதலுக்கு மட்டுந்தான் தெரிந்திருக்கும்,
அப்போது நாம் காதலித்தது!
அடுத்துவந்த நாட்களில்
வார்த்தைகளைத் தாண்டி
பார்வைகள் பேசிக்கொண்டதை
வார்த்தையில் வடிக்க முடியுமா?
எல்லோர்க்கும் முன்பு பேசிக்கொண்டிருந்தவள்,
யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்ப் பேசுகிறாய்!
பேசுவதே பாதிதான்…அதிலும் பாதியை
பார்வையில் சொல்லிவிட்டுப் போனால்
எப்படிப் புரியும்?
பன்மொழி வித்தகனாக யாராலும் முடியும்!
பெ(க)ண்மொழி வித்தகனாக யாரால் முடியும்?
காதல்
சொல்லப்படுவதும் இல்லை!
கேட்கப்படுவதும் இல்லை!
அது உணரப்படுவது!
உணர்ந்ததும் பாடாய்ப் படுத்துவது!
நம் காதலை நாம் உணர்ந்தபிறகும்
யார் முதலில் சொல்வதென நம்மிடையேப் போட்டி!
நடுவராய் இருக்கிறது நம் காதல்!
பெண்கள் காதலைச் சொல்லும்போது
வெட்கம் பிடுங்கித் தின்னுமாம்…
ஆண்கள் காதலைச் சொல்லும்போது
பயம் வந்து கொல்லுமாம்…
உன் வெட்கத்துக்காக நான் காத்திருக்க…
என் தைரியத்தை நீ பரிசோதிக்க…
தவித்துக் கொண்டிருந்தது நம் காதல்!
வென்றாய் நீ!
சொல்லிவிடத் துணிந்து விட்டேன் நான்!
எப்படி? எப்படி?? எப்படி???
“சொல்லுவது எளிது, சொன்னதை செய்வது கடினம்!” **
காமத்துப்பால் எழுதிய வள்ளுவனா இப்படி சொன்னது?
காதல் மட்டும் இங்கே முரண்படுகிறது!
அதே மொட்டை மாடி…
மாலை நேரம்…
நீ…நான்…தனிமை…
“உங்கிட்ட ஒன்னு சொல்லனும்; ஒன்னு கேட்கனும்”
“சொல்லு”
“நான் ஒரு பொண்ணக் காதலிக்கிறேன்”
“கேளு”
“அ..து.. நீ.. தா..னா..ன்..னு.. தெ..ரி..ய..னு..ம்…”
திக்..
திக்..
திக்..
“ம்ம்ம்… இது எனக்கு முன்னாடியேத் தெரியுண்டா லூசு!”
சொல்லிவிட்டு வெட்கப் பட்டாய் நீ!
தோற்கவில்லை நான்!
“காதலுக்குப் பரிசெல்லாம் இல்லையா?”
“என்ன வேணும்?”
“ஒரு முத்தம்”
சிரித்துக் கொண்டே என் உள்ளங்கை எடுக்கிறாய்…
“நீ
உதட்டில் கொடுப்பது
மட்டும் தானடி முத்தம்…
மற்றதெல்லாம் வெறும் சத்தம்!”
சொல்லிவிட்டு, புன்னகையோடு நான் பார்க்க ,
“நீ ரொம்பப் பேசற.. உனக்குக் கையிலக் கூடக் கிடையாது.. இந்தா இப்படியே வாங்கிக்க” என்று சொல்லி
“உன் உள்ளங்கையில் முத்தமிட்டு
உதடு குவித்து ஊதி விட்டாய்…
காற்றிலெல்லாம் கலந்துபோனது,
உன் காதல் வாசம்!”
“என்னிடம் காதல் வாங்கினால்
முத்தம் இலவசம்” என்றாய்…
“என்னிடம் காதல் வாங்கினால்
மொத்தமாய் நானே இலவசம்” என்றேன்…
தனக்கொரு க(வி)தை
இலவசமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில்
நம்மையேப் பார்த்துக் கொண்டிருந்தது…
நம் காதல்!



சினம் கொண்டு திட்டினாலும் - அன்பாய்
தீண்டும் உன் பார்வை

ஆறுதல் தேடியலையும் போது அரவணைத்து
இன்முகம் காட்டும் உன் மனது.

காரணம் ஏதுமின்றி களிப்புற வைக்கும்  
உன் ஒற்றைப் புன்னகை

நித்தம் நித்தம் கேசம் கலைத்து
விளையாடிய உன் விரல்கள்

யாவும் இன்றில்லை எனும்போது ஏனோ 
வலித்துக் கலங்குகிறது  காதல்

மெலிதாய் சிரிக்கும் மழலைகள் முகத்தில்
தெரிவது எல்லாம் நீதான்

விடுத்த உன்சுவாசம் இன்னும் என்னை
சுற்றிக் கொண்டிருக்கிறது 

வீசும் காற்றாய் காதல் மணத்தை
பரப்பிக் கொண்டிருக்கிறாய் 

ஆதலால்தான் உன் நினைவாக நான்
காற்றை நேசிக்கிறேன்