திங்கள், 31 மே, 2010


என் 

காதலை பற்றி சொல்ல சொன்னாய்,

கவிதைகளை கொட்டினேன்..


உன் 

காதலை பற்றி சொல்ல சொன்னேன்,

வெட்கங்களை கொட்டினாய்..


தோல்வியை ஒப்பு கொள்கிறது

என் கவிதைகள்!.




உனக்கான 

என் காதல் மரத்திலிருந்து 

தினமொரு
கவியிலையாய் விழுந்து கொண்டிருக்கிறது 


என் கண்ணீர் 

எனும் மழையாலும்,


உன் 

நினைவெனும் புயலாலும். 

மற்றவர்கள் மேல் 
கோபம் வந்தால் திட்டத்தோன்றும்..
ஆனால் 


உன் மேல் 
கோபம் வந்தால் 
மட்டும் காதலிக்க தோன்றும்.

வியாழன், 27 மே, 2010


நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்


ஒரே ஒரு கவலை
எனக்கு


ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?

செவ்வாய், 25 மே, 2010


எப்போதாவது

உன்னிடம்
ஏதாவது நான் கேட்பது,

கேட்டதை பெற வேண்டும்
என்பதற்காக அல்ல...

'ம்ஹூம்' என்று
உதடு பிதுக்கி
சிணுங்கல்

கவிதை
வாசிப்பாயே...
அதை ரசிக்கத்தான்.....!




நீ
முதன் முதலாக சிரித்தது
உனக்கு ஞாபகம் இருக்கிறதா...?

அதைப் போல் தான் உள்ளது

உன் மீது

காதல் வந்தது எப்போது -
என்று
நீ கேட்பது.....




குறைகளோடு பிறக்கும்
எனது

கவிதைகள் யாவும்

உன்

முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!


உன் காதலுக்குப்
பரிசாய்

எதையேனும்

தர நினைக்கிறேன்

எதுவும் உயர்வாய்
தெரியவில்லை

உயர்வாக இருப்பதெல்லாம்
உன்னிடமே இருக்கின்றன!

செருப்பில்லாமல்

நடக்கும் போதுதான்முள் குத்துகிறது,


நீ இல்லாமல்

நடக்கும் போதுதான்

வாழ்க்கையே குத்துகிறது முள்ளாய்!

நிலவுக்கும்

சூரியனுக்கும்

அத்தனை போட்டியாம்


உன்னை

பார்ப்பதற்கு

பாவம் அவைகளுக்கு தெரியாது


நீ

என்

பார்வைக்குள் இருப்பது!



சில நேரங்களில்
மெளனம் என்பது

மன்னிப்பு..


சில நேரங்களில்
மெளனம் என்பது

தண்டனை ...


நீ மன்னிக்கவோ
தண்டிக்கவோ


நான்
தவறு ஏதும்
புரியவில்லைபிறகு


ஏன்
இந்த மெளனம்?



வெள்ளி, 14 மே, 2010

நீ 
என்னை 
ஓரக் கண்ணால் 
பார்ப்பது பிடிக்கும்,


நான் பார்த்ததும் 
தாழ்த்திக் கொள்ளும் 
பார்வை பிடிக்கும்,


நான் கேட்டதும் 
நீ 
உயர்த்தும் 
இமை பிடிக்கும், 


ஆழமாக உன்னை ரசிக்கும் போது; 
நீ 
உன்னை 
இடம் மாற்றுவது பிடிக்கும் 


நீ 
மௌனமாக இருக்கும் 
நேரம் பிடிக்கும் 


நீ
என் பெயர் அழைக்கும் 
அழகு பிடிக்கும்.

ஞாயிறு, 9 மே, 2010

உன்னை நானும் என்னை நீயும்
காணக் கிடைக்கும் நாட்களில்…

இருவரும் சந்தித்துக் கொண்ட
முதல் நொடியில் இருந்து
நகர்கின்ற அத்தனை நொடிகளும்…

சிரித்து சிரித்து
ரசித்து ரசித்து கடந்தாலும்…

நேரமாகிப்போய் பிரிய முற்படும்
அந்த கடைசி நொடியில்…

கண்ணுக்குள் திரண்டு நிற்கும்
கண்ணீரின் துளியில்தான்
உணரப்படுகின்றது…

நம் காதலின் ஆழமும் வலியும்...,

சனி, 8 மே, 2010

இன்றோ நாளையோ
இறக்கவிருக்கும் மரங்களில்
இளமையோடு துளிர்க்கும்
மலர் சிசுக்களாய்...
புதுப்புது எதிர்பார்ப்புகளோடும்
விடை தெரியா கேள்விகளோடும்
என் காதல்,

தள்ளாடித் தள்ளாடித்
தேடுகின்றேன்
தொலைந்து போன
பழைய நினைவுகளை...

அந்த மரத்தில் தானே
செதுக்கினோம்
உன் பெயரை நானும்...
என் பெயரை நீயும்...?

எம்மைப் போலவே- காலம்
மரத்தையும் விட்டுவைத்தில்லை
நரைத்த தலையுடன்
நின்றிருக்கிறது.

புதுப்புது காதல் தடங்களை
தாங்கியிருக்கிறது
படுத்துறங்கிய புல்வெளி!

இந்த இடத்தில் தானே
கைக்கோர்த்து நடைபயின்றோம் ?
ஆமாம்!
இதே இடம் தான்!

இருமருங்கிலும் எழுந்து நின்று
நிழல் பாய் விரித்து
காதலர்களை வரவேற்கும்
பெயர் தெரியா இம்மரங்கள்
"அவள் எங்கே?"
உன்னை தான் விசாரிக்கின்றன

இந்த மரங்களுக்கு
நினைவிருக்கும் நம் காதல்
உனக்கு நினைவிருக்குமோ?


என் கேள்விக்கு இல்லாவிட்டாலும்
அந்த மரங்களின் கேள்விக்காவது
விடை சொல்
"நீ எங்கே இருக்கிறாய்?"

வெள்ளி, 7 மே, 2010

free counters

உன்னை பிரிந்து 

என்று
தனிமைக்கு வந்தேனோ 

அன்றிலிருந்து
உணர்கிறேன்

உன்னைவிட
வேறு யாரும் 
என்மீது
இவ்வளவு நேசம்
வைக்கமுடியாது என்பதை!
காதல் அது ஒரு
தான்தோன்றீஸ்வரம்
தானாகவே உருவாகும்

காதல் அது சில

மோதலில் ஆரம்பமாகி
சாதலில் முடியும்

காதல் அது மிக
இரகசியமாக ஆரம்பித்து
பொது இடங்களில் திரையிடும்

காதல் அது
உள்ள உரசலில் அடைபட்டு
உடல் உரசலில் உடைபடும்

காதல் அது
சொல்லாமல் தவிக்கும்
சொல்லிவிட்டு சலிக்கும்

காதல் அது
சந்தோசத்தில் சிரிக்கும்
சந்தேகத்தால் மரிக்கும்

காதல் அது
அன்பானவர்களுக்கு அமுதம்
அழகானவர்களுக்கு ஆபத்து

காதல் அது
கனிவாக பேசி
தனிமையில் ஊமையாகும்

காதல் அது
சில்மிசம் செய்யும்
விசமும் அருந்தும்

காதல் அது
விண்ணிலும் பறக்கும்
மண்ணுக்குள்ளும் புதைக்கும்

காதல் அது
உறவுகளை உருவாக்கும்
பெற்றோர்களையும் பிரிக்கும்

காதல் அது
பலரிடம் வாழ ஆசைப்படும்
சிலரிடம் மட்டும் வாழும்.

உன்னோடு

இருந்த நிமிடத்தை

கடிகாரம் திரும்ப திரும்ப
காட்டுகையில்


மறக்க முடியவில்லை

உன்னையும்
நீ விட்டு சென்ற காதலையும்!.



வள்ளுவன்

உன் இதழ்களை பார்த்தபின்புதான்

திருக்குறளை இரண்டு வரியில் எழுத தொடங்கினானோ -என்ற தீராத கேள்விக் கனைகளும் அவ்வப்பொழுது என்னை தீண்டி பார்க்கத்தான் செய்கின்றன .